மொழியை மாற்றவும்
×
உள்ளடக்கம்
தமிழ் – குமாவோனி
ப்யாக் கான்ணபினண் (காவாயி) மேம்
  • வணக்கம் பாண்டே ஜி, உங்களுக்கு வாழ்த்துக்கள். தாமதமாகிவிட்டது, என்னை மன்னிக்கவும்.
    நமஸ்கார் பாண்டே ஜ்யு, பதாயி ஹோ அபூங்கன். தேர் ஹைகே யார் மங்க் ஊண் மேம் மாஃப் கரியா.
  • நன்றி தாக்கூர் சாஹேப், நீங்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சி, நீங்கள் இந்த நிகழ்வை சிறப்பித்தீர்கள், உங்கள் வருகையில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
    தன்யவாத் ஹோ டாகூர் சைப் அபுன் ஆச்சா பௌதை பல் லாகோ, அபுங்க ஊந்ணைல் ஹமரி ஷோபா பட் கே.
  • சபாஷ் நண்பா, பையனுக்கு கல்யாணம், மருமகள் வீட்டுக்கு வந்துவிட்டாள், வயசான காலத்தில் வேறு என்ன வேண்டும்.
    பௌதை படி கரௌ யார் ச்யோலௌக ப்யா ஹைகோ, கர் மேம் ப்வாரி ஐ கே அவுர் கே சைன் புடயாங்காவ்.
  • என்ன செய்வது யார் , அவனுக்கும் திருமணம் செய்ய வேண்டும் அல்லவா, குழந்தைகளுக்கு திருமணம் செய்து குடும்ப பொறுப்பை ஏற்படுத்தித் தருவது பெற்றோரின் பொறுப்பு அல்லவா. அப்போதுதான் ஒவ்வொரு மனிதனும் வீட்டுப் பொறுப்பில் இருந்து விடுபடுகிறான், நான் சொல்வது சரிதான், இல்லையா? என்ன?
    கே கரூன் யார், கரணைன் ச்சி யைக் ப்யா லை, மை பூங்கி ஜிமதாரீ ஜ்ஜோ ப்பை நானாதினனௌங்க கர் பார் ஜோடனைகி. தபை ஆதிம் கிரஸ்தீ கி ஜிமதாரீ படி முக்த லை ஹுன், டீக் கூந்ணன்யூன் நை. கஸ்?
  • ஆமாம் நீ சரியாகத்தான் சொல்கிறாய், என் பொறுப்பு இன்னும் என் தலையில் தான் இருக்கிறது.
    ஹோய் கூண் த டீக் ரௌச்சா பான்டே ஜ்யூ. மரி ஜிம்மேவாரி த ஆயி டாடி ச்சு ம்யார் க்வாரம்.
  • செய் நண்பா, நீயும் பையனின் திருமணத்தை எங்காவது நிச்சயம் செய். எவ்வளவு சீக்கிரம் செய்கிறாயோ அவ்வளவு நல்லது, பிறகு நீங்களும் கங்கை நதியில் குளிப்பீர்கள். நீ சொன்னால் நானும் உன் பையனுக்கு பெண் தேடுவேன்.
    கரௌ கரௌ யார் துமலை ச்யோலக் ப்யா கைந் டைராஔ. ஜது ஜல்தி நிபட் கே உது பல், கங்க நை லேலா துமலை. கூஞ்சா த மைன்லை தேகுன் கைன் கோயி செலி துமார ச்யாலாக லிஜி.
  • கூடிய சீக்கிரம் செய்வேன், முதலில் என் மகனுக்கு எந்த பெண் பொறுத்தமாக இருப்பாள் என்று கண்டுபிடிக்க வேண்டும்.
    கங் த பாத் மே மைம் பைலி க்வே சேலி த மிலௌ பலிபலி ஜெய் ச்யாலாக லைக்.
  • ஏய், தேடினால் மட்டும்தான் கிடைக்கும், அங்கே இங்கே சொல்லி வைக்க வேண்டும், சிலரிடம் சொல்லி வைக்க வேண்டும்.
    அரே ஜப் டூன் கோஜ் கரலா தபை து மிலைலி, இதகை காௌஔ உதகை கௌஔ சார் ஆதிமன் மேன் ஜிகர் கரௌ.
  • அண்ணே, நான் எல்லாவற்றையும் என் தரப்பிலிருந்து செய்திருக்கிறேன், ஆனால் விதி எப்பொழுது நடக்க வேண்டும் என நிச்சயித்திருக்கிறதோ, அப்பொழுது மட்டுமே சாத்தியமாகும்.
    பாயீ அபண் தரபை ஸப் கர் ரகௌ பர் விதீக் விதான் ஜப் ஹோல தபை த பாத் பணன்.
  • நீங்கள் சொல்லிவிட்டீர்கள், இப்போது நானும் முயற்சிக்கிறேன். பையனை ஆசீர்வதிப்போம்.
    துமல் கை ஹாலௌ த அப் மைன்லை கோஷிஷ் கரூன். ஹிடௌ ஜரா ச்யால் கன் ஆஷிர்வாத் தி தேலா.
  • ஆமாம் ஆமாம், முடிந்தவரை உங்கள் மருமகளை தேடிப்பார்க்கலாம், அவள் எப்படி இருக்கிறாள் என்று பார்ப்போம்.
    ஹோய ஹோய ஹிடௌ துமரி ப்வாரிக் தர்ஷன் த கரி லினூன், கஸி ச்ச தேன் தேகணசான் மே.
  • நண்பரே, நான் உங்களிடம் ஏதாவது சொன்னால், நான் என் சொந்த மருமகளை மிகவும் பாராட்டுகிறேன் என்று சொல்வீர்கள், நீங்களே சென்று பாருங்கள்.
    அப் யார் மைம் பதூனௌ தும் கௌலா படி தாரீஃப் கரணௌ அபணி ப்வாரிகி, தும் குதை ஹிட் பேர் தேக் லியௌ.
  • மகனே, இவர் தாக்கூர் சாஹிப், இவர் சமூக நலத்துறை இயக்குனர். அவர்களை வாழ்த்துகள், மருமகளே, நீங்களும் வணக்கம் செய்யுங்கள்.
    ச்யாலா யோ தாகூர் சைப் சன், டாயரெக்டர் சன் சமாஜ் கல்யான் மேம். பைன்லாக கௌ இனுதன். ப்வாரி து லை கௌ.
  • அதற்கெல்லாம் அவசியம் இல்லை மகனே. நான் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறேன், நீ என் குழந்தை.
    அரே தைகி கே ஜரூரத் ந்ஹான் பேடா. மைல் ஜை துமனகன் ஆசீர்வாத் திநண் ச்சு, தும் நாந்னை பயா ஹமார.
  • வாழ்த்துக்கள், மகனே, உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கை வெற்றியடையட்டும், நான் இன்னும் என்ன சொல்லவது.
    ஜி ரயை பேடா. பதாயி ஹோ தும் த்வினன் கன். துமர் ஜீவன் ஸஃபல் ஹோஔ அவுர் கே கை ஸகனூன் மைம்.
  • இதை எடுத்துக்கொள், மகளே, நான் உன்னை முதல்முறையாக ஆசீர்வதிப்பதால் இது உனக்கு ஒரு சிறிய பரிசு. வைத்துக்கொள்ளுங்கள் இது சம்பிரதாயம், நாங்கள் இதை தவிரக்க முடியாது.
    லெ ப்வாரி யோ ஷகுன் ச்ச த்யோர மூக் தேகியௌகா. தர் லே செலி யகன் யோ த ஷகுன் பை, நைன் நின் கரன்.
  • வாருங்கள், கொஞ்சம் தேநீர், தண்ணீர் அல்லது குளிர்பானம் அருந்தலாம். பிறகு வசதியாக அமர்ந்து உரையாடுவோம்.
    ஹிடௌ ஹோ குணின் சஹா பாணி யா கே டன்டஹன்ட் பேலா. பை ஜை ஹோலின் அராமைல் பாத்சீத்.
  • யார், நான் டீ குடிக்க மாட்டேன் ; வெய்யில் அதிகமாக இருக்கிறது. ஆமாம், கொஞ்சம் குளிர்ச்சியாக ஏதாவது குடிக்கச் கொடுங்கள், குடிக்கிறேன்.
    சஹா த யார் மைன் நின் பின்யூன், கரம் ஹேரௌ பௌதை. ஹோய கே டன்டஹன்ட் மன்டை லே, உ த பியீ லை ஜால.
  • நான் நிச்சயமாக குளிர்ச்சியாக கொண்டுவரச் சொல்கிறேன். எனக்கும் குளிர்ச்சியாக ஏதாவது குடிக்க வேண்டும் போல் உள்ளது, மிகவும் சூடாக இருக்கிறது.
    ஜரூர் ஜரூர் டன்டி மன்டூ. மேர் லை மன் ஹேரௌ பிநண் ஹுன், கர்மி பௌதை ஹைரை.
  • சரி கிளம்புகிறேன் நண்பா, நானும் குளிர்பானம் எடுத்துக்கொண்டு விட்டேன். இப்போது வீட்டிற்கு செல்ல வேண்டும். அலுவலகத்திலிருந்து நேராக இங்கு வந்தேன்.
    அப் ஹிதூன் யார் தன்ட் லை பி ஹைலௌ. கர் லை ஜாநண் ச்ச ஆயி. ஔஃபிஸ் பை சித்த யைன் ஐயூன்.
  • இது சரி இல்லை, சாப்பாடு ரெடி, இரவு சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள். இது எங்கே நடக்கும், யாராவது சாப்பிடாமல் போவார்களா?
    தஸ் நி ஹுன், கான் தய்யார் ச்ச கை பேர் ஜாலா. தஸ் கான் ஹுன் பின் கய்யை க்வே ஜான் கே?
  • பாண்டே ஜி, அதிகமாக உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு மருத்துவர் எனக்கு அறிவுறுத்தியதால் என்னால் உணவு உண்ண முடியாது.
    பாண்டே ஜ்யூ யார் காந்ண் நி கை சகன்யூன் மைன் கிலை கி டாக்டரைல பரஹேஜ் பதை ராகௌ கரிஷ்ட காங்ணௌங்க.
  • அப்படியானால் சரி அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை, ஆனால் நீங்கள் இப்படி சாப்பிடாமல் போவது எனக்கு பிடிக்கவில்லை.
    அச்சா தப் த கே பாத் நை பர் யார் பல் நி லாங்கணைன் பின் கய்யை ஜான்ணௌ ச்சா.
  • வருத்தப்பட ஒன்றுமில்லை. இதுவும் என் வீடு தான் , நான் உணவு சாப்பிட மீண்டும் வருகிறேன்.
    நக் மாற்னணைன் கே பாத் ன்ஹான் ஹோ. அபண் கரைகி பாத் த பை ஃபிர் கை ல்யூன் கபை கர் ஐ பேர்.
  • ஆமாம் நீங்கள் கூறுவது சரி. வீட்டிற்கு ஒரு நாள் வந்து சாவகாசமாக ரொட்டி சாப்பிடுங்கள், கண்டிப்பாக வாருங்கள் நமஸ்காரம்.
    ஹான் தௌ கை துமல் பாத். கர் ஐயா கதினை ஆராமைல் கராக ரவாட காலா, அயா ஜரூர் நமஸ்கார்.